இலங்கை அதிபர் தேர்தல்: 80 சதவீத வாக்குகள் பதிவு

இலங்கை அதிபர் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தது.

இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

ஒன்றரை கோடி வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர், 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு 3 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய வேட்பாளர்களான பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபட்ச ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் இலங்கை எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிடோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட அளவில் 4 மணி நிலவரப்படி திரிகோணமலை, அம்பாரா மாவட்டத்தில் 70 சதவீதமும், முல்லைத்திவில் 72.5 சதவீதமும், கிளிநொச்சியில் 68 சதவீதமும், வவுனியா மற்றும் பதுளாவில் 72 சதவீதமும், மன்னாரில் 65.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. யாழ்பாணம் மாவட்டத்தில் 64 சதவீதமும், அதிக பட்சமாக ரத்தனபுரா, கண்டி மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 
Published by:Vijay R
First published: