கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்: பிறந்த குழந்தைக்கு வைரஸ் பரிசோதனை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது

கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்: பிறந்த குழந்தைக்கு வைரஸ் பரிசோதனை..!
மாதிரி படம்
  • Share this:
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு தடம்படித்துள்ளது.  ஆண், பெண், குழந்தைகள், முதியவர் உள்ளிட்ட அனைவரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். களுத்துரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், களுத்துரை மாவட்டத்திற்குட்பட்ட பேருவளை - பன்னிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். பேருவளை - பன்னிலத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு கர்ப்பிணி சென்றிருந்தபோது அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading