இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களை அந்நாட்டு போலீசர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் நேற்று ஒரே நாளில் 8 இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 36 வெளிநாட்டினர் உள்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது.
இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா ஆகிய 2 பேரும், கேரளாவைச் சேர்ந்த ரசீனா என்பவர் உள்பட 6 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 9 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இதில் 7 பேர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இதுவரை சந்தேகத்தின் பேரில் 24 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.