பிரதமர் அலுவலக செலவுகளை மேற்கொள்ள ராஜபக்சவுக்கு தடை

இலங்கையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகள் செய்ய தடை விதித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம், 123 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

news18
Updated: November 30, 2018, 11:55 AM IST
பிரதமர் அலுவலக செலவுகளை மேற்கொள்ள ராஜபக்சவுக்கு தடை
ராஜபக்ச
news18
Updated: November 30, 2018, 11:55 AM IST
இலங்கையில் பிரதமர் அலுவலக செலவுகளை ராஜபக்ச மேற்கொள்ள தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்ச-வை நியமித்தார். மேலும், நாடாளுமன்றத்தை கலைத்தும் வெளியிட்ட அறிவிப்பால், இலங்கையில் அரசியல் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியது. அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இருமுறை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டாலும், பிரதமர் பதவியில் இருந்து விலக ராஜபக்ச மறுத்துவிட்டார். இது தொடர்பான வழக்குகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகள் செய்ய தடை விதித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம், 123 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த கூட்டத்தை ராஜபக்ச ஆதரவாளர்கள் புறக்கணித்ததால், தீர்மானத்திற்கு எதிராக வாக்குகள் எதுவும் விழவில்லை. ராஜபக்ச தரப்புக்கு இந்த தீர்மானம் மேலும் ஒரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

Also see...

First published: November 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...