இந்தியாவின் நிதி பங்களிப்புடன் இலங்கையில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் பங்களிப்புடன் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவைக்காகவும், கொரோனா பேரிடரை கையாளுவதற்கு உதவி வருவதற்காகவும், இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு நன்றி கூறியுள்ளார். ரயிலின் இஞ்சினில் இந்தியா மற்றும் இலங்கை கொடிகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன.
இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து, தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னாவின் காங்கேசன்துறைக்கும் இடையே புதிதாக ரயில் சேவை நேற்று துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள டீசல் ரயில் இஞ்சின் மற்றும் ரயில் பெட்டிகள் அனைத்தும் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டவை.
புதிய ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்திய தூதரகத்தின் இணை தூதர் வினோத் கே.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அந்த ரயிலில் அவர்கள் பயணித்தனர்.
Also read:
43வயது மெக்கானிக்கை கொலை செய்து ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர்
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக இந்த சேவை விளங்குவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இலங்கை ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்!! இன்று வடமாகாணத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையானது, - உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நாடு தழுவிய கவனம், என இந்தியாவின் அபிவிருத்தி கூட்டுறவின் 2 முக்கிய தூண்களை எடுத்துக்காட்டுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read:
ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்த ரயில் சேவையானது மக்களிடையே பரிமாற்றத்தை எளிதாக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனவும் இந்திய தூதரகத்தின் இணை தூதர் வினோத் கே.ஜேக்கப் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.