இலங்கை அமைச்சரவையில் 25 வயதே ஆன ஜீவன் தொண்டமானுக்கு இடம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை அமைச்சரவையில் 25 வயதே ஆன ஜீவன் தொண்டமானுக்கு இடம்
ஜீவன் தொண்டமான்
  • News18
  • Last Updated: August 13, 2020, 2:44 PM IST
  • Share this:
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி மொத்தமுள்ள 225 இடங்களில் 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

புதிய நாடாளுமன்றத்திற்கான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று கண்டியில் நடைபெற்றது. இதில் நிதி, நகர அபிவிருத்தி, மத விவகாரம் உள்ளிட்ட துறைகளை மகிந்த ராஜபக்ச தன்வசம் வைத்துள்ளார். மேலும், கோத்தபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சவுக்கு நீர்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையும், அவரது மகன் ஷாசீந்திர ராஜபக்சவுக்கு உயர் தொழில்நுட்பத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் இருந்து மட்டும் 4 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.


அதே நேரத்தில், டக்ளஸ் தேவானந்த, அலி சப்ரி உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மகனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

25 வயதே ஆன ஜீவன் தொண்டமான், எஸ்டேட் குடியிருப்பு மற்றும் சமூக கட்டமைப்பு வளர்ச்சி துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்கள் வசிக்கும் பகுதியான நுவரா - எலியா பகுதியில் அவர் போட்டியிட்டு வென்றுள்ளார்.

ஜீவன் தொண்டமான் சென்னை மற்றும் கோவையில் பள்ளிப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading