Home /News /international /

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

அம்பந்தொட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' கடந்த 11ஆம் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17ஆம் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாகவும் கூறப்பட்டது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, செயற்கைகோள்களை கண்காணிக்கும் அதிநவீன வசதிகள் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலில் இருப்பதால் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
    அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை அரசு கூறியது.

    இந்தியாவின் எதிர்ப்புக்கு சீனா தனது கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம். எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

    மேலும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்து விட்டது. எதிர்பார்த்தபடி, சீன உளவு கப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வரவில்லை. அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அக்கப்பல் காத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சீன உளவு கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்தது.சீன கப்பலின் வருகையை ஏன் எதிர்கிறது என இந்தியா சரியான காரணத்தை கூறவில்லை என இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டன்.. புகழ்பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

    சீன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியான நிலையில் அம்பந்தொட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து சீன உளவு கப்பலின் நகர்வை இந்தியா கூர்ந்து கண்காணித்து வருகிறது. 2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட யுவான் வாங்க் 5 உளவு கப்பல் 11,000 டன் பொருள்களை வைத்திருக்கும் திறன் கொண்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: India vs China, Sri Lanka

    அடுத்த செய்தி