கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

Gotabaya Rajapaksa won Srilanka President Election |

கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
கோத்தபய ராஜபக்ச (Reuters)
  • News18
  • Last Updated: November 17, 2019, 4:33 PM IST
  • Share this:
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

35 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது.


இன்று காலையே ஓரளவு அதிக வாக்குகள் கோத்தபய பெற்ற நிலையில், அவரது கட்சியினர் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து கூறினர். தற்போது, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கோத்தபய வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சே 52.25 சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாசா 41.99 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜே.வி.பி சார்பில் போட்டியிட்ட அனுரா குகரா திசனாநாயகா 3.16 சதவிகித வாக்குகள் பெற்றார். மற்ற அனைத்து வேட்பாளர்களுமே சொற்ப வாக்குகளை பெற்றுள்ளனர்.தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான யாழ்ப்பணம், மட்டக்களப்பு, வன்னி, திரிகோணமலை ஆகிய இடங்களில் சஜித்துக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கோத்தபயக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்