ஐ.நா.வின் போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகுகிறோம் - இலங்கை வெளியுறவு அமைச்சர்

ஐ.நா.வின் போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகுகிறோம் - இலங்கை வெளியுறவு அமைச்சர்
  • News18
  • Last Updated: February 27, 2020, 9:40 AM IST
  • Share this:
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசே பொறுப்பேற்கும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போதைய இலங்கை அதிபர் சிறிசேன தலைமையிலான அரசு, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளுடன் இணைந்து இந்த தீர்மானங்களை கொண்டுவந்தது. இதன்பிறகு இலங்கையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆட்சியமைத்த நிலையில், தீர்மானத்திலிருந்து இலங்கை விலக இருப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, போர்க்குற்றத்துக்கு பொறுப்பேற்கும் தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்படுத்த முடியாதவையாக இருப்பதாகவும், மக்களின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் கூறினார்.

ஜனநாயக நடைமுறைகளை மீறி அப்போதைய அரசு தீர்மானத்தை ஏற்றுள்ளதாக குற்றம்சாட்டிய தினேஷ் குணவர்தன, தீர்மானத்திலிருந்து விலகுகின்ற போதிலும், ஐ.நா.வுடன் தொடர்ந்து நல்லுறவுடன் செயல்படுவோம் எனக்கூறினார்.
 
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading