இஸ்லாமியர்களே இல்லாத முதல் அரசாங்கம்- ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் 9 இஸ்லாமிய அமைச்சர்களும் இரண்டு இஸ்லாமிய ஆளுநர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: June 5, 2019, 4:42 PM IST
இஸ்லாமியர்களே இல்லாத முதல் அரசாங்கம்- ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே. (Reuters)
Web Desk | news18
Updated: June 5, 2019, 4:42 PM IST
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத அரசாங்கமாக தற்போதைய அரசு அமைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 260 பேர் பலியாகினர். இந்த சூழலில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அரசைக் கண்டித்து தற்போது இலங்கையில் 9 இஸ்லாமிய அமைச்சர்களும் இரண்டு இஸ்லாமிய ஆளுநர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

”1948-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த இலங்கையில் இதுவரை இல்லாத அமைச்சரவை அமைந்துள்ளது. தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. இனவாத உணர்வு வளர்வது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு வலு சேர்ப்பதாக ஆகிவிடும். அப்படிச்செய்து தீவிரவாதத்தை நாமே பலப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.


மேலும் பார்க்க: பிரதமர் மோடியை வரவேற்க்கக் காத்திருக்கிறோம் - இலங்கை அதிபர்
First published: June 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...