உலகையே உலுக்கிய இலங்கை வெடிகுண்டு தாக்குதல்! ஒரு முழு பார்வை

இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: April 21, 2019, 9:19 PM IST
உலகையே உலுக்கிய இலங்கை வெடிகுண்டு தாக்குதல்! ஒரு முழு பார்வை
இலங்கை - குண்டு வெடிப்பு
Web Desk | news18
Updated: April 21, 2019, 9:19 PM IST
இலங்கை தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதலை அடுத்து அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை நள்ளிரவில் தொடங்கி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  இலங்கையின் தலைநகர் கொழும்புவிலும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொழுது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின.

இலங்கை - குண்டு வெடிப்புகொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போ பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு பகுதியில் உள்ள இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர விடுதிகள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் வெளிநாட்டினர் 35 பேர் உட்பட 215 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து பிற்பகலில் கொழும்புவில் மேலும் 2 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்நிலையில் 8வது தாக்குதல் மட்டும் மனிதவெடிகுண்டு தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை - குண்டு வெடிப்பு


Loading...

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக இலவசத் தொலைப்பேசி எண்களையும் அறிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலை தெரிவித்தார்.இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனத்தை போப் பிரான்சிசும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனத்தையும், உயிரிழந்தோருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள துருக்கி அதிபர், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இலங்கை குண்டு வெடிப்பு


தாக்குதல் குறித்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Also Watch

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...