இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளரும், அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் நாளன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு துறைச் முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி, விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நரஹென்பிட்டாவில் உள்ள போலீசாருக்கான மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் புஜித்தை கைது செய்ததுடன், தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹோமஸ்ரீ பெர்னாண்டோவையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான கேள்விகளை முன்வைத்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb blast, Srilanka bomb blast