இலங்கைச் சுதந்திர தின விழாவில் இனி தமிழில் கீதம் இசைக்கப்படாது..!

தமிழில் தேசிய கீதப் பாடலை இசைக்க முக்கியக் காரணமாய் இருந்தவர் முன்னாள் இலங்கை அமைச்சர் மனோ கணேசன்.

இலங்கைச் சுதந்திர தின விழாவில் இனி தமிழில் கீதம் இசைக்கப்படாது..!
கோத்தபய ராஜபக்ச
  • News18
  • Last Updated: February 3, 2020, 8:32 PM IST
  • Share this:
இலங்கையின் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதன்முறையாக தமிழ் மொழியில் அந்நாட்டின் தேசிய கீதத்தை இலங்கை அரசு இணைத்துக்கொண்டது.  சிங்கள தேசிய கீதம் ‘நமோ நமோ மாதா’ பாடலை தமிழில் ‘தாயே’ என்ற மொழிபெயர்ப்புப் பாடலாக கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இத்தனைக் காலம் பாடப்பட்டு வந்தது. தற்போது 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் சமூக இணக்கத்தைக் காட்ட தமிழில் தேசிய கீதப் பாடலை இசைக்க முக்கியக் காரணமாய் இருந்தவர் முன்னாள் இலங்கை அமைச்சர் மனோ கணேசன். சுதந்திர தின முக்கிய நிகழ்வில் மட்டும் தமிழில் கீதம் இசைக்கப்படாது என்றும் இதர மாகாண விழாக்களில் இசைக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மேலும் பார்க்க: காதல் வேண்டி ஆயிரக்கணக்கில் செலவழித்து பேனர் கோரிக்கை வைத்த ‘சிங்கிள்’ பையன்!
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading