ராஜினாமா கடிதம் அளித்தார் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர்!
குண்டு வெடிப்பு நடக்கும் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு அலட்சியாக இருந்துள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழந்த இடம். (AFP)
- News18
- Last Updated: April 25, 2019, 6:38 PM IST
இலங்கை பாதுகாப்புதுறைச் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ ராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு அனுப்பிவைத்தார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று தொடர்ச்சியாக எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. அந்த குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு நடக்கும் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு அலட்சியாக இருந்துள்ளது.
எனவே, இந்திய அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக, பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகளை மாற்ற உள்ளதாக அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, ராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு அனுப்பியுள்ளார். Also see:
இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று தொடர்ச்சியாக எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. அந்த குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு நடக்கும் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு அலட்சியாக இருந்துள்ளது.
எனவே, இந்திய அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக, பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகளை மாற்ற உள்ளதாக அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, ராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு அனுப்பியுள்ளார்.