Home /News /international /

அக்டோபர் வரைதான் உணவுப்பொருட்கள் கையிருப்பு- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

அக்டோபர் வரைதான் உணவுப்பொருட்கள் கையிருப்பு- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் பொருளாதார சிக்கலைத் தீர்க்க அந்த நாடு பல வெளிநாடுகளிலிருந்து உதவி கோரியுள்ளது. நிதியுதவி கிடைக்காவிட்டால் இலங்கயின் எதிர்காலம் கேள்விக்குறி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் பொருளாதார சிக்கலைத் தீர்க்க அந்த நாடு பல வெளிநாடுகளிலிருந்து உதவி கோரியுள்ளது. நிதியுதவி கிடைக்காவிட்டால் இலங்கயின் எதிர்காலம் கேள்விக்குறி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, “பல நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம். நாட்டை புனரமைக்க வேண்டும் பொருளாதார சிக்கலைத் தீர்க்க வேண்டும், நிதி மற்றும் கடனுதவி கிடைக்காவிட்டால் இலங்கை எதிர்காலம் கேள்விக்குறிதான்.

    உரம் கையிருப்பு இல்லாததால் விவசாயம் முடங்கியுள்ளது. வரும் அக்டோபர் வரை உணவுப்பொருட்களை விநியோகிக்க முடியும், அதன் பிறகு நிலைமை இன்னும் மோசமடையும். மக்கள் 2 வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.

    அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத்திருத்தம்:

    அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, அனைத்து அதிகாரங்களும் அதிபர் வசம் வரும் வகையில், 20ஏ என்ற சட்ட திருத்தத்தை மேற்கொண்டார்.இந்நிலையில், அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை அடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

    அந்த வகையில், அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன.இது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முடிந்து, தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 21 சட்ட திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை தாக்கல் செய்யபட உள்ளதாக இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.

    தனியார் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்கே கூறிய போது, “மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசியல் ஸ்திரமின்மை உள்ளது. நாங்கள் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்க விரும்புகிறோம்.

    எங்கள் அன்னியச்செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம். சில நாட்களுக்கு ஒன்றுமே இருப்பதில்லை சில நாட்களில் 30-40 மில்லியன் டாலர்கள் உள்ளன. அரசை ஒப்படைக்கும் போது 7.5 பில்லியன் டாலர்கள் அன்னிய செலாவணி கையிருப்புடன் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசு எங்களுக்கு வெகுவாக உதவி வருகிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஐஎம்எஃப் உடன் ஒப்பந்தம் போட வேண்டி வரும், நானும் அதை எதிர்நோக்குகிறேன்” என்றார் ரணில் விக்ரமசிங்கே.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ranil Wickremesinghe, Sri Lanka political crisis, Srilanka

    அடுத்த செய்தி