நியூசிலாந்து மசூதி துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பழிவாங்க ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது - இலங்கை அரசு

இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

news18
Updated: April 23, 2019, 3:34 PM IST
நியூசிலாந்து மசூதி துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பழிவாங்க ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது - இலங்கை அரசு
உயிரிழந்தவர்களுக்கு நடந்த அஞ்சலி
news18
Updated: April 23, 2019, 3:34 PM IST
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலின் எதிரொலியாக ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

மாற்று மதத்தினர் குடியேற்றத்தை கண்டித்து முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டவர் தெரிவித்தார். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


படிக்க... இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டியையை ஒட்டி இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

குண்டுவெடிப்பில் 310-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.

Loading...

படிக்க... தீவிரவாதி கேட்ட பாடல்... இந்தியர்கள் மீது வெறுப்பு... - நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு அறிக்கை விவரம்

உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.

பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே “நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

புகைப்படம்... இலங்கை குண்டு வெடிப்பு சிதிலங்கள்

First published: April 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...