உலகளவில் ட்ரெண்டாகும் ‘ஸ்ப்ரிங் ஈக்யூனாக்ஸ்’!

இன்று தோன்றும் முழு நிலவு  19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூப்பர்மூன் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

news18
Updated: March 20, 2019, 12:19 PM IST
உலகளவில் ட்ரெண்டாகும் ‘ஸ்ப்ரிங் ஈக்யூனாக்ஸ்’!
கூகுள் டூடுல் ஸ்ப்ரிங் ஈக்யூனாக்ஸ்
news18
Updated: March 20, 2019, 12:19 PM IST
இன்றைய கூகுள் டூடுலில் இருக்கும் ‘ஸ்ப்ரிங் ஈக்யூனாக்ஸ்’ உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஈக்யூனாக்ஸ் என்றால் என்ன?

ஈக்யூனாக்ஸ் எனும் லத்தீன் சொல்லுக்கு உத்தராயண காலம் என்பது பொருள். அதாவது இந்த நாளில் பகல் மற்றும் இரவு சரி பாதியாக இருக்கும்.

மேலும், வசந்த காலத்தின் முதல் நாளாகவும் இது கருதப்படுகிறது. இந்த தினத்தில் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். வசந்த காலத்தின் முதல்நாளை வரவேற்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஈக்யூனாக்ஸ் எனப்படுவது பருவ கால மாற்றத்தின் அறிகுறி. ஒரு வருடத்தில் இரு முறை இந்த ஈக்யூனாக்ஸ் வரும். மார்ச் மாதம் வரும் ஈக்யூனாக்ஸ் வசந்தகால ஈக்யூனாக்ஸ், செப்டம்பர் மாதத்தில் வரும் ஈக்யூனாக்ஸ் இலையுதிர்கால ஈக்யூனாக்ஸ்.

கூகுள் இன்று வெளியிட்டுள்ள டூடுலில் பூமியின் மீது பூக்கள் மலர்வது போன்ற அனிமேஷன் வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும், இன்று தோன்றும் முழு நிலவு  19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூப்பர்மூன் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Also See...
Loading...
First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...