ராஜபக்சே பெருபான்மையை நிரூபிக்கும் வரை ரணில்தான் பிரதமர்- சபாநாயகர்

இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில், திய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, பெருபான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில் விக்கிரமசிங்கேவை தான் பிரதமராக அங்கீகரிக்க முடியும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே பெருபான்மையை நிரூபிக்கும் வரை ரணில்தான் பிரதமர்- சபாநாயகர்
சபாநாயகர் கரு ஜெயசூர்யா
  • News18
  • Last Updated: November 5, 2018, 4:00 PM IST
  • Share this:
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேவை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே, பெருபான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில் விக்கிரமசிங்கேவை தான் பிரதமராக அங்கீகரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற 7-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக தம்மிடம் கூறிவிட்டு தேதியை மாற்றிய அதிபருக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: November 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்