Home /News /international /

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி! சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி! சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப்

  • News18
  • Last Updated :
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் நான்சி பெலோனி அனுமதி வழங்கியுள்ளார்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைன் நாட்டில் அவர் நடத்தி வரும் தொழில் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், டிரம்ப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோனி அனுமதி அளித்துள்ளார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Trump

    அடுத்த செய்தி