பெற்ற தாயையே கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை

ஆல்பர்ட்டோ

தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களில் சிலவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளார், மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்துள்ளார்.

  • Share this:
    ஸ்பெயினில்  பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, அதை சமைத்து சாப்பிட்ட இளைஞருக்கு நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டணை விதித்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற தாயையே கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட இளைஞர் பற்றிய தகவல் வெளியாகி உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறால், பெற்ற தாயையே கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபா - சிபிசிஐடி அலுவலத்தில் தொடரும் விசாரணை

    பின்னர், தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களில் சிலவற்றை சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்தார். இந்நிலைரயில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோவின் தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார்.

    Rread More :  கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு 15 நாள் சிறை

    இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆல்பர்ட்டோவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து அவர்கள் ஆல்பர்ட்டோவைவிடம் விசாரணை நடத்தியபோது உண்மை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஆல்பர்ட்டோவை காவல்துறையினர் கைது செய்தனர்.

    Must Read : ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு கோடிகளை குவித்த மதன்... சிக்கிய மனைவி

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
    Published by:Suresh V
    First published: