தன்நாட்டு குடிமக்கள் யாரும் டை அணிந்து கொள்ள வேண்டாம் என அறிவுரையை ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார். புவி வெப்ப மயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவிலும் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது காட்டுத் தீ பரவல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த காட்டுத் தீ பரவல் பிரச்னை நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில், 30 டிகிரிக்கு குறைவாகவே இருந்து வந்த நிலையில், இந்தாண்டு வெப்ப நிலை 45.7 டிகிரியாக பதிவானது.
இந்நிலையில், வெப்பத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் விதவிதமான யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டு குடிமக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் பேட்ரோ, நான் இப்போதெல்லாம் டை அணிவதில்லை. அதை நீங்கள் கவனித்தீர்களா. இதன் மூலம் நாம் ஆற்றலை சேமிக்க முடியும். எனவே, அனைத்து அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் டை அணிவதை இனி தவிர்க்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களும் இதை பின்பற்றுவார்கள் என விரும்புகிறேன் என்றார்.
இதையும் படிங்க: பெண்ணை ஏமாற்றி ஆணுறை பயன்படுத்தாமல் உடல் உறவு.. பாலியல் குற்றமாக அறிவித்த நீதிமன்றம்
டை அணிந்து காலரை இருக்கமாக வைத்திருந்தால் ஏசி பயன்பாட்டு அளவு அதிகம் தேவை படும் என்பதால், டை கட்டுவதை தவிர்ப்பதன் மூலம் ஏசியால் செலவாகும் மின்சார ஆற்றலை கொஞ்சமாவது சேமிக்க முடியும் என்ற யோசனையில் இந்த வழிகாட்டுதலை ஸ்பெயின் பிரதமர் வழங்கியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் வெப்ப அலை காரணமாக ஏற்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஐரோப்பாவில் நிலவிவருவதால், அந்நாடுகள் தங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் திணறிவருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heat Wave, Spain, Summer Heat