ஹோம் /நியூஸ் /உலகம் /

உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

Food

Food

தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த ஜூவான் ஜோஸ் திடுக்கிட்டுள்ளார். ஆம், உணவுப் பொருளில் ஏதோ ஒரு உயிரினம் இறந்துகிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காய்கறி என நினைத்து உணவில் இருந்த இறந்துபோன எலியின் தலையை தவறுதலாக சாப்பிட்டதாக இளைஞர் தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு நேர்ந்த வினோத சம்பவத்தை அதிர்ச்சியுடன் விவரித்ததுடன், உணவுப் பொருளை வாங்கிய சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார்.

வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்களில் குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்படும் காய்கறிகள், இறைச்சி என உணவுப் பொருட்களைத் தான் பெரும்பாலும் மக்கள் வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் சில நேரங்களில் பூச்சிகள், பல்லிகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறோம். இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பேக்கிங் செய்யும் போது சரியான முறையில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Also read:  தீவிர மதுவிலக்கை அமல்படுத்தும் தாலிபான்கள்.. 3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றி அழித்தனர்

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலியே இருந்துள்ளது. ஆனால் அதை கவனிக்காத அந்த இளைஞர் அதை சாப்பிட்ட பின்னரே ஏதோ சாப்பிடக்கூடாத ஒரு பொருளை சாப்பிட்டுவிட்டதாக அவருக்கு தெரியவந்திருக்கிறது.

ஜூவான் ஜோஸ் என்ற அந்த இளைஞர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து உறைந்த காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வாங்கி வந்த உணவுப் பொருட்களை சமைத்து முடிந்த அந்த இளைஞர் அதை ஒரு தட்டில் போட்டு சாப்பிடத் தொடங்கியிருக்கிறார்.

Also read:  மனைவியின் தகாத உறவை நிரூபிக்க மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

தட்டில் ஏதோ கருப்பாக இருந்த பொருளை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்ட போது அது மிகவும் வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் இருப்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் அது முள் முட்டைக்கோசு (artichoke) என அவர் கருதியிருக்கிறார். ஆனால் தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த ஜூவான் ஜோஸ் திடுக்கிட்டுள்ளார். ஆம், உணவுப் பொருளில் ஏதோ ஒரு உயிரினம் இறந்துகிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

Artichoke - Wikipedia
artichoke

பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் அதைக் காட்டியபோது அவருடைய தட்டில் இருந்தது செத்துப் போன எலி என்பது அவருக்கு தெரியவந்தது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஜூவான் ஜோஸ் காய்கறிகளை வாங்கி வந்த போது அதில் இருந்த எலியை அவர் கவனிக்கவில்லை. தற்போது இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது ஜூவான் ஜோஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Also read:  மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் சப்ளையரை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும், அவர்கள் பொதுவாக தீவிர சோதனைகளை செய்பவர்கள் எனவும், இனி அனைத்து நிலைகளிலும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ளுவதாக கூறியதாகவும் சூப்பர் மார்க்கெட் தரப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

First published:

Tags: Food