முகப்பு /செய்தி /உலகம் / டிவியில் ஒலித்த குரல்கள்.. போதைக்கு அடிமை.. தாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்

டிவியில் ஒலித்த குரல்கள்.. போதைக்கு அடிமை.. தாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீதிமன்றத்தில் என் அம்மாவை கொலை செய்யும் படி பல குரல்கள் என்னிடம் சொல்லியது என ஆல்பர்டோ அதிர்ச்சி அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் தனது தாயை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 15 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 66 வயதான மரியா சோலேடாட் கோமெஸ் கடந்த 2019-ம் ஆண்டு தனது மகனால் படுகொலை செய்யப்பட்டார். மரியா சோலேடாட் கோமெஸ் மாயம் குறித்து அவரது நண்பர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது மகன் ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் தனது வளர்ப்பு நாயுடன் இருந்துள்ளார். மரியாவுக்கும் அவரது மகன் அல்பர்டோவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. காவல்துறை வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. மரியாவை சந்தித்து அவருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என காவல்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர்.

ஆல்பர்டோ போதை பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்த ஆல்பர்டோவிடம் மரியா குறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். ‘அவர் இங்கேதான் இருக்கிறார்.. என்ன அவர் இறந்துவிட்டார். நானும் என் வளர்ப்பு நாயும் அவரது உடலை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோம்’ எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்துள்ளனர். பெட்ரூமில் மரியாவின் உடல் துண்டுதுண்டுகளாக இருந்துள்ளது. அந்த அறை முழுவதும் மரியாவின் உடல் பாகங்களாக கிடந்துள்ளது. அவற்றில் சிலவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைத்துள்ளார் ஆல்பர்டோ. ஃபிரிட்ஜில் சில உடல் பாகங்களும் இருந்துள்ளது .

காவல்துறையினரின் விசாரணையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தேன். உடலை பெட்ரூம் கொண்டு சென்று துண்டு துண்டுகளாக்கினேன். சில உடல் பாகங்களை நாய்க்கு உணவாக கொடுத்தேன். நானும் கொஞ்சம் சாப்பிட்டேன்” என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் என் அம்மாவை கொலை செய்யும் படி பல குரல்கள் தொலைக்காட்சி வாயிலாக என்னிடம் சொல்லியது, அவை நண்பர்கள், பிரபலங்கள், பக்கத்துவீட்டுக்காரர்களின் குரல்களாக இருந்தது. தாயை தாக்கியதும் அவரை கொலை செய்ததும், அந்த உடலை உட்கொண்டதும் தனக்கு நினைவில் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஆல்பர்டோ போதை பழக்கத்துக்கு அடிமையாகி அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மனநலம் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆல்பர்டோவுக்கு 15 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Court, Crime | குற்றச் செய்திகள்