கொரோனா முதல் அலையின்போது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஸ்பெயின் அரசு கதி கலங்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். ஒட்டுமொத்தமாக 62 லட்சத்து 92 ஆயிரத்து 745 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 89 ஆயிரத்து 405 யை எட்டியுள்ளது.
Also read: இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது மூன்றாவது அலை என்று மருத்துவ வல்லுனர்கள் கூறி வரும் நிலையில், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதேபோன்ற சம்பவங்கள் படிப்படியாக நடக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மும்பையில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் ஊரடங்கு காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Also read: கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த காங்கிரஸ்
முன்பு தடுப்பூசி இல்லாத காரணத்தாலும், கொரோனா குறித்த புரிதல் புதிதாக இருந்ததாலும் உலகம் முழுவதும் சுகாதாரத்துறை பெரும் சவாலை சந்தித்தது. தற்போது, தடுப்பூசி, தயார் நிலையில் அனைத்து சேவைகள் என இருப்பதால் இனி எந்த அலை வந்தாலும், எதிர்கொள்ளக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், யாராவது காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், உடல் வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகளுடன் வரும் நபர்களையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Also read: இந்தியாவில் முதல் ஓமைக்ரான் மரணம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Spain