• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • கோவிட் தடுப்பூசி போட்ட அனைத்து டூரிஸ்ட்களும் எங்கள் நாட்டிற்கு வரலாம் - எல்லைகளை திறந்த ஸ்பெயின்!

கோவிட் தடுப்பூசி போட்ட அனைத்து டூரிஸ்ட்களும் எங்கள் நாட்டிற்கு வரலாம் - எல்லைகளை திறந்த ஸ்பெயின்!

ஸ்பெயின்

ஸ்பெயின்

கடந்த 2019 ஆம் ஆண்டில் ஸ்பெயினிற்கு சென்ற 83.5 மில்லியன் சுற்றுலா பயணிகளில், ஐந்தில் ஒரு பங்கினர் யுனைட்டட் கிங்டமில் இருந்து சென்றவர்கள் ஆவர்.

 • Share this:
  கொரோனா காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பல நாடுகளில் இன்னும் பரவி வரும் நிலையில், சர்வதேச சுற்றுலா துறை என்பது இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியை கண்டுள்ளது. சுற்றுலா துறையை பெரிதும் நம்பியுள்ள ஸ்பெயின், தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகளில் ஒன்றாகும், 2020 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.8 சதவீதம் சரிவை கண்டது.

  இந்நிலையில் வெளிநாட்டு பார்வையாளர்களின் வருகையால் அனைத்து முக்கியமான சுற்றுலாத் துறையையும் புத்துயிர் பெறும் என்று ஸ்பெயின் நம்புகிறது. எனவே உலகம் முழுவதிலும் இருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வரவேற்கும் விதமாக தன் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது ஸ்பெயின் அரசு. இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ், சுற்றுலாவில் உலகளாவிய தலைமையை மீட்டெடுக்கும் பணியில் தங்கள் நாடு ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது ஸ்பெயின் ஒரு பாதுகாப்பான இடமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Also Read: "நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்.." பெரம்பூரில் குடிபோதையில் கடைகளில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

  அதே போல ஸ்பெயினுக்குள் நுழையும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் தடுப்பூசி போடாத ஐரோப்பியர்கள் இனி அதற்கு பதிலாக மலிவான ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். ஆனால் மிகப்பெரிய சுற்றுலா சந்தையான யுனைடெட் கிங்டம், ஸ்பெயினை அதன் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பிரிட்டிஷ் பயணிகள் ஸ்பெயினில் இருந்து வீடு திரும்பும் போது குவாரன்டைன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அத்துடன் விலையுயர்ந்த கோவிட் -19 பரிசோதனைகளுக்கு பணம் கட்ட வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வழக்கமாகவே எப்போதும் பிரிட்டனில் இருந்து ஏராளமானோர் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்வர். கடந்த 2019 ஆம் ஆண்டில் ஸ்பெயினிற்கு சென்ற 83.5 மில்லியன் சுற்றுலா பயணிகளில், ஐந்தில் ஒரு பங்கினர் யுனைட்டட் கிங்டமில் இருந்து சென்றவர்கள் ஆவர். எனினும் நிலைமையை பொருட்படுத்தாமல், ஸ்பெயின் சுற்றுலாத் துறையில் இருப்பவர்கள் கோடைகால சுற்றுலா பயணிகள் வருகையில் எழுச்சியை இன்னும் எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பாக பேசிய ஸ்பெயினின் டிராவல் ஏஜெண்ட் சங்க தலைவர் ஜோஸ் லூயிஸ் பிரீட்டோ, நாட்டின் எல்லைகளை திறந்திருப்பதன் மூலம் மீளப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

  மேலும் ஸ்பெயினின் மூன்று முக்கிய சந்தைகளானபிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் கடந்த சில வாரங்களாக டூர் ஆப்ரேட்டர்கள் டூர் தொடர்பான ஏராளமான விசாரணைகளை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்றவாறு கோஸ்டா டெல் சோல் (Costa del Sol) முதல் கேனரி தீவுகள் (Canary Islands) வரை நாடு முழுவதும் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது நிறுத்தி வைக்கப்பட்ட பாதைகளில் மீண்டும் விமானங்களை இயக்க அந்நாட்டு விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

  Also Read: Hula Hooping: கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுவனை பாராட்டிய பியர் கிரில்ஸ்!

  ஐரோப்பா முழுவதிலும் உள்ள பெர்லின், லில்லி, ஃபிராங்ஃபர்ட் மற்றும் லண்டன் போன்ற இடங்களிலிருந்து விரைவில் சுமார் 20 வெவ்வேறு விமானங்களை மலகா ஏர்போர்ட் (Malaga airport) எதிர்பார்க்கிறது. தவிர வரும் திங்கட்கிழமை முதல் கப்பல், படகுகளை மீண்டும் தனது துறைமுகங்களுக்குள் ஸ்பெயினும் அனுமதிக்க உள்ளது. பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பி.சி.ஆர் பரிசோதனையை முன்வைக்காமல் உள்ளே நுழைய ஸ்பெயின் மே மாத இறுதியில் இருந்து அனுமதித்தது. ஆனாலும் ஸ்பெயினை இன்னும் ரெட் பட்டியலில் இருந்து பிரிட்டன் நீக்காமல் இருப்பது ஸ்பெயினிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. எனினும் நிச்சயமற்ற தன்மையின் பின்னணியில், முக்கிய டிராவல் ஆப்ரேட்டரான TUI ஜூன் 13 வரை ஸ்பெயினுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

  லண்டன் தனது முடிவை இன்னும் மூன்று வாரங்களுக்கு மறுபரிசீலனை செய்யாது என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 45 மில்லியன் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தை கொண்டுள்ளது ஸ்பெயின். ஆனால் கடந்த ஏப்ரல் இறுதி வரை சுமார்1.8 மில்லியன் விசிட்டர்கள் மட்டுமே ஸ்பெயினிற்கு டூர் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: