பாலின சமத்துவத்தை முன்னிறுத்தி உலகின் பல்வேறு பெண்கள் கல்வி மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பிற்கு பல்வேறு நலத்திடங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றுடன் பெண்கள் சுகாதார நலனையும் ஒருங்கிணைத்து பேறு காலம் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் நடைமுறையை சில உலக நாடுகள் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன.
உலகில் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, ஜாம்பியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் நாடாக ஸ்பெயின் தற்போது இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சோசலிச அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாதவிடாய் காலத்தில் 3 நாள்கள் விடுப்புடன் கூடிய விடுமுறைக்கான மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 185 பேரும் எதிராக 154 பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து இந்த மசோதா பெரும்பான்மையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு சட்டம் அமலுக்கு வந்தது. தேவைப்பட்டால் பெண்கள் 3 நாள் விடுமுறையை 5 நாள்களாக நீடித்துக் கொள்ளலாம் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகள் நீண்ட காலமகவே இந்த மாதவிடாய் விடுப்பு சட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளன. ஜப்பான் நாட்டில் இந்த சட்டம் 1947இல் இயற்றப்பட்டு 70 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Menstrual Cycle, Menstrual time, Menstruation, Spain, Women Health