Home /News /international /

நிலவில் மோதப்போகும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்; என்ன செய்ய போகிறது நாசா?

நிலவில் மோதப்போகும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்; என்ன செய்ய போகிறது நாசா?

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

SpaceX Rocket : நிலவின் மீது மோதும் நான்கு டன் எடையுள்ள இந்த ராக்கெட் துண்டின் நிகழ் நேர தாக்கத்தை பூமியிலில் இருந்து பார்க்க முடியாது.

வருகிற மார்ச் மாத தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் "எச்சங்கள்" நிலவில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், அது விழுவதால் ஏற்படும் பள்ளத்தை ஆய்வு செய்ய உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் - நாசா (NASA ) கடந்த வியாழக்கிழமை கூறியது.

மேலும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் மிச்சங்கள் நிலவின் மீது விழும் இந்த நிகழ்வை "ஒரு அற்புதமான ஆராய்ச்சிக்கான வாய்ப்பு" என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்த ராக்கெட் ஆனது நாசாவின் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல கடந்த 2015 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. குறிப்பிட்ட ராக்கெட்டின் செக்கென்ட் ஸ்டேஜ் அல்லது பூஸ்டர் என்று அழைக்கப்படும்பாகம் அண்டவெளியில் மிதந்து வருகிறது. அறியாதவர்களுக்கு, ஒவ்வொரு ராக்கெட் ஏவலின் போதும் இது போன்ற ஸ்பேஸ் டெக்னாலஜி ஜங்க் உருவாவது வழக்கம் தான்.

தற்போதைய பாதையில், ராக்கெட்டின் செக்கென்ட் ஸ்டேஜ் ஆனது, 2022 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று நிலவின் முதுகு என்று அழைக்கப்படும் ஃபார் சைட்டில் (Far side) மோதும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாசாவின் செய்தித் தொடர்பாளர் ஏஃஎப்பி-யிடம் கூறி உள்ளார்.

இதையும் படிங்க :  ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..

நிலவின் மீது மோதும் / விழும் நான்கு டன் எடையுள்ள இந்த ராக்கெட் துண்டின் நிகழ் நேர தாக்கத்தை பூமியிலில் இருந்து பார்க்க முடியாது. தற்போது சந்திரனைச் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டராலும் (Lunar Reconnaissance Orbiter - LRO) பார்க்க முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட மோதல் நிகழும்போது அதைக் கவனிக்கும் நிலையில் எல்ஆர்ஓ இருக்காது என்றும் நாசாவின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

இருப்பினும், மோதலுக்கு முன் மற்றும் மோதலுக்கு பின் என்கிற ஒப்பீட்டை நிகழ்த்த, அதற்கான புகைப்படங்களைப் பிடிக்க எல்ஆர்ஓ பின்னர் பயன்படுத்தப்படலாம். குறிப்பிட்ட மோதலால் நிலவில் உண்டாகும் பள்ளத்தை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும், அதை கண்டுபிடிக்க சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம்," என்றும் நாசாவின் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். மேலும் அவர் "இந்த தனித்துவமான நிகழ்வு ஒரு அற்புதமான ஆராய்ச்சிக்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது." என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க :  'முஸ்லிம்' என்ற காரணத்தால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் - பெண் எம்.பி பரபரப்பு புகார்

நிலவின் மீது மோதவுள்ள ராக்கெட்டின் மிச்சமானது மணிக்கு 9,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான வேகத்தின் கீழ் நிகழும் ஒரு தாக்கமானது, அட்வான்ஸ் செலினாலஜி (advance selenology) அல்லது நிலவின் அறிவியல் ஆய்வுக்கு உதவும் என்று நாசா நம்புகிறது.

அப்பல்லோ விண்கல பயணங்களின் போது, விஞ்ஞான நோக்கங்களுக்காக, அதாவது நிலவின் அதிர்வு சார்ந்த அளவீடுகளை சோதிப்பதற்காக, வேண்டுமென்றே விண்கலத்தை சந்திர கிரகத்தின் மீது மோத வைத்த நிகழ்வுகள் நடந்திருந்தாலும் கூட, தற்போது நடக்கவுள்ள மோதல் தான் நிலவின் மீதான கண்டறியப்பட்ட முதல் திட்டமிடப்படாத மோதல் ஆகும். விண்கற்கள் மற்றும் பிற விண்வெளி பொருள்களின் பாதைகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் சாப்ட்வேரை உருவாக்கிய வானியலாளர் பில் கிரே தான், ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் பூஸ்டர் பாகமானது நிலவுடன் மோதவுள்ளதை முதலில் கண்டறிந்தார்.

இதுபோன்ற விண்வெளிக் குப்பைகள் (space junk) எப்போதும் சந்திரனை நோக்கியே செலுத்தப்பட வேண்டும் என்கிறார் பில் க்ரே. ஏனெனில் "அது சந்திரனைத் தாக்கினால், அதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியும்," என்று கிரே நம்புகிறார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: NASA, Space

அடுத்த செய்தி