தெற்கு சூடான் நாட்டின் அதிபர் பொதுநிகழ்வு ஒன்றில் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அந்த நிகழ்வை பதிவு செய்த அரசு டிவி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டின் அதிபராக இருப்பவர் சல்வா கீர். தெற்கு சூடான் நாடு 2011ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்றில் இருந்து தற்போது வரை அதிபராக சல்வா கீர் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற அரசு விழாவில் அதிபர் சல்வா கீர் பங்கேற்றார். விழாவில் அந்நாட்டில் தேசிய கீதம் பாடிய போது அதிபர் நின்று கொண்டு அதற்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருக்கு சிறுநீர் வந்துள்ள நிலையில், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் போஸ்சிலேயே தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தார். இது அங்கிருந்த டிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை அந்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்பவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவு எப்படியோ வெளியே லீக் ஆனது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்...அதிர்ச்சி சம்பவம்
இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிபருக்கு உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இது வீடியோ பரப்பரப்பை கிளப்பிய நிலையில், அதை பரப்பியதாக சந்தேகப்பட்டு 7 ஊடகவியலாளர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக தெற்கு சூடான் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாட்ரிக் ஓயட் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: President, Viral News, Viral Video