3 குழந்தைகள் பெற்றால் ரூ.70 லட்சம் பரிசு: தென் கொரியா அதிரடி அறிவிப்பு!

3 குழந்தைகள் பெற்றால் ரூ.70 லட்சம் பரிசு: தென் கொரியா அதிரடி அறிவிப்பு!

உலகிலேயே பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் நாடாக தென் கொரியா மாறியிருக்கிறது.

உலகிலேயே பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் நாடாக தென் கொரியா மாறியிருக்கிறது.

 • Share this:
  குழந்தைகள் பெற்றுக்கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள் என
  அறிவுரை கூறும் நாடுகளுக்கு மத்தியில் குழந்தைகள்
  பெற்றுக்கொள்பவர்களுக்கு பரிசு அறிவித்திருக்கும் நாடு குறித்து
  கேள்விப்படும் போது நமக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.

  குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிந்து வரும் தென் கொரியாவின்
  சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் தலைநகரான சேங்வானில்
  இறப்பு விகிதத்தை காட்டிலும் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து
  வருவது சமீபத்திய புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்தது.

  அதாவது தென் கொரியாவில் கடந்த 2020ம் ஆண்டில் 2,75,815
  பிறப்புகளும், 3,07,764 இறப்புகளும் பதிவாகியுள்ளது. இறப்பைக்
  காட்டிலும் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது
  தெரியவந்தது. மேலும் மக்கள் தொகையும் ஒரு மில்லியனுக்கு கீழ்
  செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது அதிகாரிகளை கவலை
  கொள்ளச் செய்யும் வகையில் அமைந்தது.  இதன் அடிப்படையில் அந்நகர நிர்வாகத்தினர் பிறப்பு
  விகிதத்தை அதிகரிக்க ஒரு திட்டத்தை வகுத்தனர். அதன்படி
  அந்நகரில் திருமணமாகும் புதிய தம்பதிகளுக்கு ஒரு லட்சம்
  டாலர் கடன் தொகை வழங்கப்படும். (நம்ம ஊர் மதிப்பில் இது
  சுமார் 70 லட்ச ரூபாயாகும்)

  தம்பதியர் ஒரு குழந்தை பெற்றால் வாங்கிய கடனுக்கு வட்டி
  எதுவும் செலுத்தத்தேவையில்லை, இரண்டாவது குழந்தை
  பெற்றால் கடன் தொகையில் 30% கட்டத்தேவையில், மூன்றாவது
  குழந்தை பெற்றால் வாங்கிய கடன் முழுவதையும்
  கட்டத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தென் கொரிய நகரத்தில் அமலாகியிருக்கும் இப்பரிசுத்திட்டம்
  அந்நகர பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உதவும் என
  நம்பப்படுகிறது.  உலகிலேயே பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் நாடாக தென் கொரியா மாறியிருக்கிறது. அங்கு 2015 - 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஜோடிகள் திருமணம் செய்திருக்கின்றன. இவர்களில் 40% பேருக்கு குழந்தை கிடையாது என்பது ஸ்டேடிக்ஸ் கொரியா என்ற அமைப்பின் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

  இதனை சரிக்கட்டும் நோக்கில் அந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,826 அமெரிக்க டாலர்கள் உதவித்தொகையாக அளிக்கும் திட்டம் வரும் 2022 முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது.
  Published by:Arun
  First published: