• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி..!

தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

253 தொகுதிகளில் போட்டியிட்ட கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சியான கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நடைபெற்ற தேர்தலில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவாக 66 சதவீத வாக்குகள் பதிவாயின.

    வாக்குப் பதிவின்போது முகக்கவசம், கையுறை அணிந்து தனி மனித இடைவெளியைப் பின்பற்றி வாக்காளர்கள் வாக்களித்தனர். சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கும் மாலையில் ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    300 உறுப்பினர்களைக் கொண்ட கொரிய நாடாளுமன்றத்திற்கு 253 தொகுதிகளில் போட்டியிட்ட கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    கொரோனா பரவலுக்கு மத்தியில் தென் கொரியா வெற்றிகரமாக தேர்தலை நடத்திய நிலையில் கொரோனா பரவலை அதிபர் மூன் ஜே இன் கையாண்ட விதமே தேர்தலில் அவரது கட்சியின் அமோக வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: