தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் மக்கள் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ்

புதிய வகை கொரொனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது.

 • Share this:
  தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை மீண்டும் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  கொரோனா நோயை பரப்பும் சார்ஸ் கோவ்ட் -2 வைரஸ் உருமாறி இருப்பது விஞ்ஞானிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. பி.1.351 என அழைக்கப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸ் குறித்த புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நபருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளுக்கான பரிசோதனையில், புதிய வகை கொரொனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது.

  தொற்று நோய்க்கு எதிராக இயல்பாக எதிர்ப்பு சக்தி இருந்தாலும் கூட புதிய வகை வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போதுமானதாக இருக்காது என கூறப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக தொற்று பாதிப்புக்கு ஆளானாலும், அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என்பதற்கு இதுவரை ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்றாலும், இந்த வகை வைரஸ் குறித்து ஆய்வுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றப்படாத பட்சத்தில் உலகில் இருந்து கொரோனா பெருந்தொற்று ஒழிய வாய்ப்பில்லை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி செலுத்துவது சிறந்தது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனையில் உள்ள தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் புதிய வகை வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியுமென்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: