அதிவேகத் தொற்றுப் பரவல்: தென் ஆப்ரிக்காவில் மது விற்பனைக்கு மீண்டும் தடை..

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் எதிரொலியாக தென்னாப்பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிவேகத் தொற்றுப் பரவல்: தென் ஆப்ரிக்காவில் மது விற்பனைக்கு மீண்டும் தடை..
மாதிரிப்படம்
  • Share this:
அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் எதிரொலியாக தென்னாப்பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு இரவு நேர ஊரடங்கையும் அதிபர் சிரில் ராமபோசா அமல்படுத்தியுள்ளார். அதன்படி இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 வரை அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிவதையும் அதிபர் சிரில் ராமபோசா கட்டாயம் ஆக்கியுள்ளார்.

Also read... கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் தென் ஆப்ரிக்காவில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading