2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க அதிபராக பதவி வகித்தவர் ஜேக்கப் ஜூமா. அவர் ஆட்சியின் போது ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆஜராகத் தவறியதால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமை காவல்துறையிடம் சரண் அடைந்த ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் 75 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : 111 நாடுகளில் டெல்டா வைரஸ்; பிற நாடுகளுக்கும் வேகமாகப் பரவும்: WHO எச்சரிக்கை
டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்.
தொடர்ந்து வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்த கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என அதிபர் ராம் போஸ்சாவை உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
Also Read : போக்குவரத்து நெரிசலால் 2 மணி நேரம் காத்திருந்து கடுப்பான இளைஞர் செய்த விபரீத செயல்!
நலேடி பாண்டோர்-யை தொலைபேசியில் தொடர்வு கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் நாட்டில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில், தென்னாப்பிரிக்க அரசு எடுத்து வரும் அமைதிக்கான முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார், அமைதியை நிலைநாட்டுவதே முதல் கடமை என நலேடி பாண்டோர் உறுதியளித்தாகவும் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: South Africa