முகப்பு /செய்தி /உலகம் / ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள் - ஆய்வில் வெளிவந்த உண்மைகள்

ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள் - ஆய்வில் வெளிவந்த உண்மைகள்

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் (Omicron), ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் (Omicron), ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் (Omicron), ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Last Updated :

‘ஒமைக்ரான்’ இது தான் உலகம் உச்சரித்து வரும் புதிய பெயர். கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய புதிய வகையான ஒமைக்ரான், அதிவேகத்தில் பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கிறது. கொரோனா தொற்றின் டெல்டா எனும் கொடிய வகையை விட ஒமைக்ரான் (Omicron) மிகவும் வேகமான பரவக் கூடியதாகவும், இது தடுப்பூசி திறனை பாதிப்பதாகவும், தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாகவும் ஒமைக்ரான் கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான், கண்டறியப்பட்டு ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நேரத்தின்படி இந்தியாவில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அது தான் தொண்டை வலி (Sore throat).

ஒமைக்ரானால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:   இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் தேதி வரை பிரிட்டனில் ஒமைக்ரான் பாதித்தோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தலைவலி, சோர்வு, 'முக்கியமாக' குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ZOE Symptom Tracking எனப்படும் ஒமைக்ரான் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமைக்ரானின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  மகளிர் நல மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழகம்!

டெல்டா - ஒமைக்ரான்: அறிகுறிகள் பொதுவானதா?

இல்லை. டெல்டாவுக்கும், ஒமைக்ரான் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது. சிலருக்கு குடல் பிரச்சினைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்

top videos

    ஒமைக்ரான் அறிகுறிகள் ஆய்வினை தலைமையேற்று நடத்தியிருக்கும் விஞ்ஞானியான, பேராசிரியர் டிம் ஸ்பெண்டர் கூறுகையில், ஒமைக்ரானின் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக இருக்கிறது. எனவே, மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அது கோவிட்டாகவும் இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Omicron