என் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ளது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வருத்தம்..!

மனைவிக்குக் கொரோனா தாக்குதல் உறுதி ஆகியுள்ளதால் தற்போது கனடா பிரதமருக்கும் கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது.

என் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ளது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வருத்தம்..!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்- சோஃபி
  • News18
  • Last Updated: March 13, 2020, 11:24 AM IST
  • Share this:
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தனது மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மிகவும் வேதனையுடன் அறிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயின் மனைவி சோஃபி. சோஃபிக்கு நேற்று கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதற்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட முடிவில் அவருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடே தனது ட்விட்டர் பக்கத்தில், “துரதிர்ஷடவசமாக எனது மனைவி சோஃபிக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட உள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் அவர் தன்னைத்தானே பார்த்துக்கொள்வார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மனைவி சோஃபிக்கு கொரோனா தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டதால் தற்போது கனடா பிரதமருக்கும் கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் பார்க்க: கொரோனா குறித்த சந்தேகங்கள்: உதவும் வாட்ஸ்அப் ’ஹெல்ப்லைன்’ மொபைல் எண்!
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading