வடகொரியாவில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், அதிபர் கிம் ஜாங் உன் உருக்கமாக பேசியதைக் கேட்டு பலரும் கண் கலங்கினர். வடகொரியாவில் அண்மையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜாங் உன், இயற்கை பேரிடர்களில் சிக்கி உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
Also read: கட்சி ஆண்டு விழா - கண்கவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடகொரியா அதிபர் கிம்ஜாங்க் உன்
தன் மீது, நாட்டு மக்கள் வானளவு நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதிய நடவடிக்கையை தாம் எடுக்கவில்லை என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் உருக்கமாக பேசினார்.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் பேச்சை கேட்ட சிலர், கண்ணீர் சிந்தினர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.