ஹோம் /நியூஸ் /உலகம் /

பூமியை நெருங்கும் ’சூரியப் புயல்’- உலக அளவில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு?

பூமியை நெருங்கும் ’சூரியப் புயல்’- உலக அளவில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவின் விண்வெளி வானிலை கணிப்பு மையத்தின்படி இந்த புயல், ஒரு பரந்த இடத்தில், உயர் அதிர்வெண் வானொலி தகவல்தொடர்பு இருட்டடிப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்காவின் விண்வெளி வானிலை கணிப்பு மையத்தின்படி இந்த புயல், ஒரு பரந்த இடத்தில், உயர் அதிர்வெண் வானொலி தகவல்தொடர்பு இருட்டடிப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்காவின் விண்வெளி வானிலை கணிப்பு மையத்தின்படி இந்த புயல், ஒரு பரந்த இடத்தில், உயர் அதிர்வெண் வானொலி தகவல்தொடர்பு இருட்டடிப்புக்கு வழிவகுக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஜியோமேக்னட்டிக் ஸ்டார்ம் எனப்படும் புவி காந்தப்புயல்கள், சூரியக் காற்று பூமியின் சுற்றுப்பகுதியில் நுழையும் போது, உண்டாகும் சக்திவாய்ந்த ஆற்றல் பரிமாற்றத்தால், பூமியின் காந்த மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) இந்த புயலை G-1 அல்லது ‘மைனர்’ என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த அதிவேகமான சோலார் புயல், மணிக்கு 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் பூமியை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உலகின் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் spaceweather.com கூறியுள்ளது. இதன் விளைவாக, காற்றின் வேகம் மணிக்கு 500 km/s என்ற அளவை எட்டக்கூடும். இது புவி காந்த புயல்கள் மற்றும் உயர் அட்சரேகை அரோராக்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also Read | பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைத் தேடி செவ்வாய் கிரகத்தில் களமிறங்கிய ‘பெர்சிவரன்ஸ்’!

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) இந்த புயலை G-1 அல்லது ‘மைனர்’ என்று வகைப்படுத்தியுள்ளது.

“சோலார் விண்ட் வருகிறது:” சூரியக் காற்று அதிவேகமாக, பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் வளிமண்டலத்தில், இது பூமத்திய ரேகையின் துளையிலிருந்து பாயும், காற்றின் வேகம் வினாடிக்கு 500 கிமீ மேல் உயரக்கூடும். முழு அளவிலான புவி காந்த புயல்கள் சாத்தியமில்லை என்றாலும், குறைந்த தாக்கமுள்ள புவி காந்த அமைதியின்மை, அதிக அட்சரேகை அரோராக்களைத் தூண்டக்கூடும் என்று spaceweather.com தெரிவித்துள்ளது.

spaceweather.com கூறியது போல, சூரியனின் வளிமண்டலத்தில் ஒரு பூமத்திய ரேகை துளையிலிருந்து பாயும் சோலார் ஃபிளேர், முதன் முதலில் ஜூலை 3 அன்று கண்டறியப்பட்டது.

பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள செயற்கைக்கோள்களும் உள்வரும் சோலார் ஃபிளேர்களால் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜி.பி.எஸ் நேவிகேஷன், மொபைல் போன் சிக்னல் மற்றும் செயற்கைக்கோள் டிவியை நேரடியாக பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பவர் கிரிட்களும் இதனால் பெரிதாக பாதிக்கப்படலாம்.

அமெரிக்காவின் விண்வெளி வானிலை கணிப்பு மையத்தின்படி (Space weather prediction center), இந்த புயல், ஒரு பரந்த இடத்தில், கிட்டத்தட்ட ஒரு நேரத்துக்கு, உயர் அதிர்வெண் வானொலி தகவல்தொடர்பு இருட்டடிப்புக்கு வழிவகுக்கும் என்று கணித்துள்ளது.

Also Read | மின்னல் எப்படி உருவாகிறது? நாசா அளித்த விளக்கம்!

புவி காந்தப்புயல்கள் என்றால் என்ன?

ஜியோமேக்னட்டிக் ஸ்டார்ம் எனப்படும் புவி காந்தப்புயல்கள், சூரியக் காற்று பூமியின் விண்வெளி சுற்றுப்பகுதியில் நுழையும் போது, உண்டாகும் சக்திவாய்ந்த ஆற்றல் பரிமாற்றத்தால், பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்படும் சிறிய மற்றும் பெரிய அளவிலான இடையூறுகளைக் குறிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோலார் ஃபிளேர் என்றால் என்ன?

சோலார் ஃபிளேர் எனப்படும் சூரியக் கிளரொளி, சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான வெடிப்புகள் ஆகும். அவை எனர்ஜி, ஒளி மற்றும் அதிவேக துகள்களை விண்வெளியில் வெளியிடுகின்றன. நாசாவின் கூற்றுப்படி, இந்த கிளரொளிகள் கிளாசிஃபிகேஷன் முறையின் அடிப்படையில், அதன் வலிமைக்கு ஏற்றவாறு வகைப்படுத்துகின்றன. அதன் படி, மிகப்பெரிய ஃபிளேர்கள் "X-கிளாஸ் ஃபிளேர்" என்று அழைக்கப்படுகின்றன. ஏற்ப சிறியவை, A-கிளாஸ் கீழே வகைப்படுத்தப்படுகின்றன. அதைத் தொடர்ந்து பி, சி, எம் மற்றும் எக்ஸ் ஆகியவை உள்ளன. இன்று பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் சூரிய கிளரொளி, ஒரு X-கிளாஸ் ஃபிளேர் ஆகும்.

Published by:Archana R
First published:

Tags: Electricity, Science