தேவாலயத்திற்கு நன்கொடை அளிக்க பணத்தை எண்ணிய ட்ரம்ப்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்..

தேவாலயத்திற்கு நன்கொடை அளிக்க பணத்தை எண்ணிய ட்ரம்ப்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்..

டிரம்ப்

தேவாலயத்திற்கு நன்கொடை அளிக்கும் முன்னர் பணத்தை எண்ணி பார்த்த அமெரிக்க அதிபரின் செயல் புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேவாலயத்திற்கு நன்கொடை அளிப்பதற்கு முன்பு பணத்தை எண்ணிய செயலை பலரும் இணையத்தில் நகைச்சுவையாக பதிவிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் வேகாஸின் சர்வதேச தேவாலயத்தில் ஒரு சேவையில் கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகின்றது .

  ஹோப் ஹிக்ஸ் மற்றும் கெய்லீ மெக்னனி உள்ளிட்ட ஒரு சில வெள்ளை மாளிகை ஊழியர்களுடன் வழிபாடு செய்த டிரம்ப், “மாற்றம் 4 மாற்றம்” (“Change 4 Change.” ) என்று குறிக்கப்பட்ட நன்கொடை வாளியில் பணத்தை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பு அதனை எண்ணினார்.

   

     டிரம்ப்  எண்ணிய செயல் புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published: