வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதம்: மன்னிப்பு கோரியது அமெரிக்கா

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் தலைநகர் வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதம்: மன்னிப்பு கோரியது அமெரிக்கா
வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதம்
  • Share this:
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. மினியாபிலிஸ் நகரில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால், மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிலையை உடைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
 

மேலும் படிக்க...

கொரோனா பரவலால் அதிகரிக்கும் ஆன்லைன் சந்திப்புகள்: கிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading