ஹோம் /நியூஸ் /உலகம் /

பனியில் உறைந்த அமெரிக்கா… முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

பனியில் உறைந்த அமெரிக்கா… முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்க பனிப்பொழிவு

அமெரிக்க பனிப்பொழிவு

அமெரிக்காவில் உறை பனியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்து. வீசும் பனிப்புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiaamericaamericaamerica

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் கால குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவால், கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணமும் தடைபட்டுள்ளது.

சுமார் 20 கோடி மக்களுக்கும் மேல் வாழும், பாதிக்கும் மேலான அமெரிக்க மாகாணங்களுக்கு தீவிர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் முதல் க்விபெக் வரையில் சுமார் 3,200 கி.மீ. வரையிலும் பனிப்புயல் வீசுகிறது. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது.

தெற்கு டுகோட்டாவில் வசிக்கும் அமெரிக்க பழங்குடியினர் எரிபொருள் தீர்ந்த பிறகு, வெப்பமூட்டுவதற்காக ஆடைகளை எரித்ததாக பழங்குடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ பகுதியில், குறைந்தபட்சம் 89 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவால் பஃபல்லோ நகரமே முடங்கியுள்ளது. போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் அறிவித்துள்ளது. சியாட்டில், போர்ட்லேண்ட் பகுதிகளில் தெருக்களில் பனி உறைந்து காணப்படுகிறது.

வழக்கமாக அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ளாத லூசியானா, அலபாமா, ஃபுளோரிடா, ஜோர்ஜா ஆகிய தென் மாகாணங்களுக்கும் கடுமையான உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உறைபனியால் ஏற்பட்ட சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் நாடு முழுவதும் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பலர் கார்களில் உட்காந்தபடியே உறைபனியில் உயிரிழந்த சோகங்களும் அரங்கேறியுள்ளன. சாலைகளில் கிடக்கும் உறை பனிக் குவியல்களை அகற்றி சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதோடு உறைபனியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நவடிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நியூயார்க் நகரில் கடும் உயைபனிப் பொழிவால் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட பொதுமக்கள் வெளியில் வர முடியாத அளவிற்கு கடும் உறைபனி மற்றும் பனிப்புயல் வீசி வருகிறது. குறிப்பாக பஃபலோ நகரம் முழுவதும் பனியால் உறைந்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

இதனால் மீட்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகள் கூட பஃபலே நகரில் முடங்கியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் இருந்து வீசும் அதிகப்படியான குளிர் காற்றால் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி வீசி வருவதாகவும், படிப்படியாக ந்த குளிர்காற்று குறைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும் அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் : ரோசாரியோ ராய்

First published:

Tags: America, United States of America