Home /News /international /

முட்டையென நினைத்து கோல்ஃப் பந்துகளை விழுங்கி வேலியில் சிக்கிய பாம்பு.

முட்டையென நினைத்து கோல்ஃப் பந்துகளை விழுங்கி வேலியில் சிக்கிய பாம்பு.

கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு

கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு

பாம்பை  மீட்டு சோதிக்கும்போது தான் முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கியது தெரிந்தது.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஜோடி கோல்ஃப் பந்துகளை கோழி முட்டைகள் என்று தவறாக எண்ணி, இரண்டையும் சாப்பிட்டுவிட்டு வேலியில் சிக்கிய பாம்பு ஒன்று மீட்கப்பட்டது. வடக்கு கொலராடோ வனவிலங்கு மையம் செவ்வாய்கிழமை அன்று  இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ வனவிலங்கு மையத்தில் இருந்த பாம்பு கோழி கூட்டில் தவறுதலாக வைக்கப்பட்டிருந்த கோல்ஃப் பந்துகளை கோழி முட்டை  என்று நினைத்து  விழுங்கிவிட்டது. அதன் பின் வேலியின் மீது ஊர்ந்து செல்லும்போது பாம்பின் உடலில் இருந்த பந்தின் அளவால் வேலியின் இடையே மாட்டிக்கொண்டது. நீண்ட நேரம் போராடிக்கொண்டிருந்ததை பார்த்து வனவிலங்கு மையத்தின் அதிகாரிகள் அதை மீட்க முயற்சித்துள்ளனர்.

விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி.. 39 நிராகரிப்புக்குப் பின் கூகுளில் சேர்ந்த இளைஞர்!

பாம்பை  மீட்டு சோதிக்கும்போது தான் முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கியது தெரிந்தது. அது நீண்ட நேரமாக பாம்பின் குடல் வழியில் அடைத்து இருந்ததால் பாம்பின் குடல் பகுதி பெரிதும் பாதிப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி பாம்பின் உடலில் இருந்த பந்தை வெளியில் எடுத்தனர்." மெதுவான, கவனமாக செயல்முறை உபகரணங்கள் மற்றும் மைக்கேலா பயன்படுத்தி சிகிச்சை முடிக்க சுமார் 30 நிமிடங்கள் எடுத்தது," என்று மைய நிர்வாகி கூறினார்.

"இந்த கோல்ஃப் பந்துகள் பாம்புக்குள் கடுமையான ஜிஐ அடைப்பை ஏற்படுத்துகின்றன, மேலும் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க விரைவாகவும் பாதுகாப்பாகவும் அகற்றப்பட வேண்டி இருந்தது" என்றனர்.

ராஜஸ்தான் தாரா காட்ஸ் வனப்பகுதியில் ரம்மியமாக செல்லும் ரயில்.. வைரலாகும் வீடியோ

வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், ’தற்போது பாம்பு மிகவும் நன்றாக உள்ளது, சிறிய புண் மற்றும் சிறு அளவிலான சேதம் மட்டுமே உள்ளது. உணவு கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகிறோம்’ என்றனர்.

சுற்றுச்சூழலில் சமநிலையைப் பேணுவதில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஊர்வன இல்லாத போது மற்ற பூச்சிகள், சிறிய விலங்குகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும். கொறித்துண்ணிகள் போன்ற இரைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பாம்புகள் உதவுகின்றன. பாம்புகளில் 3,500 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன, அவற்றில் 600  விஷம் பொருந்தியதாகும்..
Published by:Ilakkiya GP
First published:

Tags: Egg, Snake, USA

அடுத்த செய்தி