ஹோம் /நியூஸ் /உலகம் /

எஞ்சின் கோளாறு.. குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்... 8 பேர் பலி!

எஞ்சின் கோளாறு.. குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்... 8 பேர் பலி!

விமான விபத்து

விமான விபத்து

விபத்துக்களான விமானம் மெடலின் நகரிலிருந்து சோகோவின் அண்டைத் திணைக்களத்தில் உள்ள பிசாரோ நகருக்குச் செல்லும் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ-31 விமான வகை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் குடியிருப்பு பகுதியில் எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மத்திய கொலம்பியாவின் ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதியது. விபத்துக்குள்ளான விமானம் காற்றில் அடர்த்தியான கறுப்பு புகையை உமிழ்ந்த வண்ணம் இருந்தது.

  விமான நிலையத்தின் ட்விட்டர் கணக்கு, விமானத்தில் இருந்த ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் இறந்ததாக அறிவித்தது. இந்த விபத்தில் ஏழு வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.

  இதையும் படிங்க: 'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி.. மைதானத்தில் பரபரப்பு..

  "பெலன் ரோஸெல்ஸ் செக்டாரில் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கத்தின் முழுத் திறனும் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று மேயர் டேனியல் குயின்டெரோ முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  விபத்துக்களான விமானம் மெடலின் நகரிலிருந்து சோகோவின் அண்டைத் திணைக்களத்தில் உள்ள பிசாரோ நகருக்குச் செல்லும் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ-31 விமான வகை என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த சிறிய ரக விமானம் டேக்ஆஃப் செய்யும் போது என்ஜின் செயலிழப்பைக் காட்டியுள்ளது. ஆனால் ஓலயா ஹெர்ரெரா விமான நிலையத்திற்குத் திரும்ப முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  மெடலின் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டில், பிரேசிலின் சாப்கோயென்ஸ் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தீர்ந்து நகருக்கு அருகிலுள்ள மலைகளில் விழுந்து நொறுங்கியதில் 16 வீரர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Columbia, Plane crash