சீன வைரஸ் என குறிப்பிட்டு களங்கம் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம் - சீனா

இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன், கற்பிதத்துடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

சீன வைரஸ் என குறிப்பிட்டு களங்கம் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம் - சீனா
இந்தியா - சீனா
  • Share this:
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் எனவும், தங்களைப் பற்றிய கற்பிதங்களோடு இல்லை எனவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகப் பேசும்போதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போதும், சீன வைரஸ் என்று குறிப்பிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் வாங்க் யி. தங்கள் சீன நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அது இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன், கற்பிதத்துடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு ட்வீட்டின் வழியாக பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவாலை சர்வதேச ஒத்துழைப்பால்தான் களைய முடியும் என தெரிவித்துள்ளார்.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading