லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட் மூலம் தாக்குதல்!

கோப்புக்காட்சி

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 6 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி தரப்பட்டது

  • Share this:
    லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 6 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி தரப்பட்டது.

    இஸ்ரேல்- பாலதீனம் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வருகிறது.  ஜெருசலேம் நகரை நாடுகளும் உரிமை கோரிவரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நகராக அமெரிக்கா அங்கீகரித்தது.  இதனை தொடர்ந்து இந்த மோதல்  மேலும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில்,  பாலஸ்தீனத்தின் காசா முனையில் இருந்து இயங்கும் ஹமாஸ் போராளிகள் அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய  வான்வெளி தாக்குதலில் அல்ஜசீரியா  ஊடகம் செயல்பட்டு வந்த கட்டிடம் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகியது. அங்கு நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியானதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அண்டை நாடான லெபனானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் இருநாட்டு எல்லைகளிலும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்இஸ்ரேலை குறிவைத்து லெபனானில் இருந்து  மூன்றாவது முறையாக மீண்டும்  ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ராக்கெட்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட நிலையில், அவை இஸ்ரேல்  எல்லையில் விழுந்தன.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ராக்கெட்டுகள் ஏவப்பட்ட தெற்கு லெபனான் பகுதியை குறிவைத்து இஸ்ரேல்  பாதுகாப்பு படையினர் பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.  இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: