சீனாவில் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்; 6 பேர் உயிரிழப்பு

இந்த தாக்குதலை நடத்திய வாகன ஓட்டியை சீன போலீசார் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான சிசிடிவி தகவல் தெரிவித்துள்ளது.

news18
Updated: March 22, 2019, 10:06 AM IST
சீனாவில் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்; 6 பேர் உயிரிழப்பு
மாதிரி படம்
news18
Updated: March 22, 2019, 10:06 AM IST
சீனாவில் இன்று அதிகாலை வேகமாக வந்த கார் ஒன்று, கூட்டத்திற்குள் பாய்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டி வந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஹுபே மாநிலத்தில் உள்ள சயோங் பகுதியில், இன்று அதிகாலை வேகமாக வந்த கார் ஒன்று, மக்கள் கூட்டத்தில் புகுந்து தாக்கியது. இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலை நடத்திய வாகன ஓட்டியை சீன போலீசார் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான சிசிடிவி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா? என்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also See...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...