ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் களைகட்டிய ‘சிங்கிள்ஸ் டே’கொண்டாட்டம்!

சீனாவில் களைகட்டிய ‘சிங்கிள்ஸ் டே’கொண்டாட்டம்!

சீனாவில் களைகட்டிய ‘சிங்கிள்ஸ் டே’கொண்டாட்டம்!

சீனாவில் களைகட்டிய ‘சிங்கிள்ஸ் டே’கொண்டாட்டம்!

சரியாக 2009ம் ஆண்டில் இருந்து இந்த ’சிங்கிள்ஸ் டே’ கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, 11 நாள் நிகழ்வாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் ஒற்றையர் தின கொண்டாட்டம், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. எனினும், இந்த ஆண்டு பெய்ஜிங்கில் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படுவதால், இந்த வருட விற்பனை மந்தமாக இருந்துள்ளது.

  சீனாவில் ஒற்றையர் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு விற்பனையில் அலிபாபா நிறுவனம் 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது. சீனாவில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சிங்கிள்ஸ் டே எனப்படும் ஒற்றையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 11.11 என நாட்கள் மாதம் அனைத்தும் ஒன்றாகவே வரும் இந்த நாளில் சீனாவில் ஆன்லைன் விற்பனை களை கட்டும்.

  சரியாக 2009ம் ஆண்டில் இருந்து இந்த ’சிங்கிள்ஸ் டே’ கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, 11 நாள் நிகழ்வாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  வழக்கமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக விற்பனையாகும் நிலையில் இந்த ஆண்டு சமூக பொறுப்பு மற்றும் எல்லோருக்கும் வளமை என்கிற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு விற்பனை நடைபெற்றுள்ளது.

  இந்நிலையில் 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலிபாபா நிறுவனம் வர்த்தகம் செய்துள்ளது. அந்நிறுவன வரலாற்றிலேயே ஒற்றையர் தினத்தில் நிகழ்ந்த குறைவான விற்பனை இதுதான் என கூறப்படுகிறது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Alibaba, China, E-commerce, News On Instagram