காதல் வேண்டி ஆயிரக்கணக்கில் செலவழித்து பேனர் கோரிக்கை வைத்த ‘சிங்கிள்’ பையன்!

தனது உயரம், கால் செருப்பு சைஸ் முதல் தான் எத்தனைப் பேரை இதுவரையில் முத்தமிட்டுள்ளது வரை விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

காதல் வேண்டி ஆயிரக்கணக்கில் செலவழித்து பேனர் கோரிக்கை வைத்த ‘சிங்கிள்’ பையன்!
டேட்டிங் மார்க்
  • News18
  • Last Updated: February 3, 2020, 8:09 PM IST
  • Share this:
காதலிக்க யாரும் இல்லாததால் ஆயிரக்கணக்கில் செலவழித்து பேனர் வைத்து காதலி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார் ஒரு சிங்கிள் பையன்.

லண்டனைச் சேர்ந்த மார்க் ரோஃப் என்ற இளைஞர் காதலி வேண்டி சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து நகரின் முக்கியப் பகுதியில் பேனர் வைத்துள்ளார். 30 வயதான மார்க் தனக்கான காதலியைக் கண்டுபிடிக்க ‘Dating Mark’ என்றதொரு இணையதளப் பக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

அந்த இணையதளப் பக்கத்தில் விரும்புவோர் டேட்டிங் கோரி விண்ணப்பிக்கலாம். இதுவரையில் அந்தத் தளத்தில் 1,000 பேருக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மார்க் இணையதளப் பக்கத்தில் தனது சுயவிவரங்களையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


தனது உயரம், கால் செருப்பு சைஸ் முதல் தான் எத்தனைப் பேரை இதுவரையில் முத்தமிட்டுள்ளது வரை விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கானோரிடமும் பேசி தனக்கான ஒருவரை நிச்சயம் தேர்ந்தெடுக்க உள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மார்க்.

மேலும் பார்க்க: இந்தியாவின் முதல் மின் ரயில் பயணத்தின் 95-வது ஆண்டுவிழா- காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்!
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading