உலகில் முதல்முறையாக ஆன்லைன் விசாரணை மூலம் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

ஆன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உலகில் முதல்முறையாக  ஆன்லைன் விசாரணை மூலம் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்
கோப்புப் படம்
  • Share this:
உலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் ஒருவருக்கு ஆன்லைன் விசாரணை மூலம் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் நீதிமன்றங்கள் காணொளியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆன்லைனில் நடந்த விசாரணையில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியாவை சேர்ந்த புனிதன் கணேசன் என்பவருக்கு சிங்கபூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.


ஆன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Also see...





First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading