• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது - சிங்கப்பூர் அரசு தளர்வு

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது - சிங்கப்பூர் அரசு தளர்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலிலிருந்து சிங்கப்பூர் அரசு தளர்வு அளித்துள்ளது.

  • Share this:
    சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனையடுத்து, 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. 2020-ம் ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கியது. மீண்டும் 2021-ம் ஆண்டும் கொரோனா இரண்டாவது அலையால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொரோனா பாதிப்புடன் போராடிவருகின்றன.

    கொரோனா தொற்றுக்குப் பின்னர் சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் வரும் பட்சத்தில் கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதேபோல், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

    இதற்காக, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியோருக்கான பயணப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் வரும் பயணிகள் பயணத்துக்கு 2 தினங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: