• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தீபாவளி ஷாப்பிங்.. லிட்டில் இந்தியாவில் சிங்கப்பூர் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள்!

தீபாவளி ஷாப்பிங்.. லிட்டில் இந்தியாவில் சிங்கப்பூர் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள்!

Little india

Little india

இங்கு இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருவதாலும், இந்திய வகை உணவுகள் பரிமாறும் கடைகள் பெருமளவில் இருப்பதாலும் இந்த பகுதி லிட்டில் இந்தியா என்றழைக்கப்படுகிறது.

  • Share this:
தீபாவளியை முன்னிட்டு இந்தியர்கல் பெரும்பான்மையாக வசித்து வரும்  ‘லிட்டில் இந்தியா’ எனப்படும் பகுதியில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க சிங்கப்பூர் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தீபங்களின் திருவிழா என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை. இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர் நாட்டிலும் இந்த பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்று கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ரோசோர் எனும் பகுதியில் இந்திய சமூகம் பரவி வசித்து வரும் ‘லிட்டில் இந்தியா’ என்றழைக்கப்படும் பகுதியில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை மிகவும் தனித்துவமானது. இங்கு இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருவதாலும், இந்திய வகை உணவுகள் பரிமாறும் கடைகள் பெருமளவில் இருப்பதாலும் இந்த பகுதி லிட்டில் இந்தியா என்றழைக்கப்படுகிறது.

இதனை பார்ப்பதற்காகவே அங்கு மக்கள் கூட்டம் கூடும். வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெருக்களில் ஷாப்பிங், இரவு நேர கடைகள், இந்திய வகை உணவு விடுதிகள் என அந்த பகுதியே களை கட்டும். இதனிடையே தற்போது கொரோனா பேரிடர் காலம் என்பதால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு ஒரேயடியாக தடை விதிக்காமல் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.

Also read: பாஜக ஆதரவுடன் துணை சபாநாயகராகும் சமாஜ்வாதி எம்.எல்.ஏ – பாஜக ஆடும் சதுரங்கம்!

இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை கொரோனா பேரிடருக்கு மத்தியில் கொண்டாடப்பட உள்ளது.

கொரோனாவை கருத்தில் கொண்டு இரவு நேர பஜார் கடைகளுக்கு மட்டும் தடை விதித்திருக்கிறது சிங்கப்பூர் அரசு. அதே நேரத்தில் உணவுக் கடைகள், ஹெரிடேஜ் சுற்றுலா, உணவுத் திருவிழாக்கள், சாசக விளையாட்டுக்கள், புதிர் போட்டிகள் உள்ளிட்ட பொதுமக்களை கவரும் பிற நிகழ்ச்சிகளுக்கு தடையேதும் இல்லை என அறிவித்துள்ளது.

Also read: சிஎஸ்கேவில் ஆடியதால் தலையெழுத்து மாறியது – சேவாக் போற்றும் இளம் வீரர்!

பாதுகாப்பான இடைவெளியில் மக்கள் நடமாடுவதை உறுதி செய்வதற்காக அமலாக்க அதிகாரிகளை சிங்கப்பூர் அரசு நியமித்திருக்கிறது, இவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்வார்கள். மீறி கூட்டம் கூடும் செயல்களில் ஈடுபடுவோருக்கு பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

லிட்டில் இந்தியா பகுதியில் உற்சாகம் குறையாமல் இந்த ஆண்டும் சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: